இந்தியா

கேரளா: 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட கும்பவுருட்டி அருவி

கேரளா: 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட கும்பவுருட்டி அருவி

kaleelrahman

பாதுகாப்பில்லாத காரணத்தால் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கும்பவுருட்டி அருவி சீரமைப்புக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.

கேரள மாநிலம் அச்சன் கோவில் கும்பவுருட்டி அருவியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீழே உள்ள குழியில் விழுந்து இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்குச் செல்ல தடைவிதித்து பாதை மூடப்பட்டது.

இந்நிலையில், ரூ.25 லட்சம் செலவில் பெரிய பள்ளங்கள் முழுமையாக கான்கிரீட்டால் மூடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா ராஜேந்திரன் அருவியை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இதையடுத்து அருவி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டம் மேக்கரைக்கு மிக அருகே இந்த அருவி உள்ளதால் குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இந்த அருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.