கேரள அரசு பேருந்து ஓட்டுனருக்கும் டிரக் ஓட்டுனருக்கும் இடையே தகராறு பல மணி நேரம் வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு, வாகன ஓட்டிகள் அவதி.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வருகின்றன. திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் திடீரென உடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் அந்த பகுதியில் ஏற்கனவே, பல நேரங்களில், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று அந்தப் பகுதியில் வந்த கேரள அரசு பேருந்து ஓட்டுனருக்கும், கனிம வளம் ஏற்றி செல்லும் டிரக் ஓட்டுனருக்கும் இடையே தகராறு காரணமாக வாகனத்தை பாலம் அருகே நிறுத்திய, கேரள, அரசு பேருந்து மற்றும் கனிம வள லாரியால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில், அதன் பின்பு வாகனம் எடுத்த பின் 1 மணி நேர வாகன நெரிசலும் ஏற்பட்டது. காவல் துறையினர் பணியில் இல்லாமலும் முன் எச்சரிக்கையாக நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் இது போன்ற பாதிப்பு தினம் தோறும் பல மணி நேரம் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ள வேண்டியதாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாகன ஓட்டிகள் கன ரக வாகனங்களை வேறு வழியில் மாற்றி அமைத்தால் மட்டுமே இங்கு போக்குவரத்து சீராகும் என கருத்து தெரிவிக்கின்றனர்.