இந்தியா

"எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” - சர்ச்சை விளம்பரம் குறித்து கென்ட்  

"எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” - சர்ச்சை விளம்பரம் குறித்து கென்ட்  

webteam

வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை இழிவுபடுத்துவது போல விளம்பரம் வெளியிட்ட கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கென்ட் நிறுவனம் மாவு பிசையும் இயந்திரத்திற்கு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில், மாவு பிசையப் பெண் பணியாளரை அனுமதிக்கிறீர்களா? அவர்களின் கைகளில் தொற்று இருக்கலாம். எனவே சுத்தமான பாதுகாப்பான எங்கள் நிறுவனத்தின் இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இந்த விளம்பரம் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள கென்ட்,

"எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த உள்நோக்கத்துடனும் அந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை. அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் நாங்கள் மதிக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர்