இந்தியா

அரசியலமைப்புக்கு எதிராக முடிவு எடுக்கமாட்டேன் - கர்நாடக சபாநாயகர் 

அரசியலமைப்புக்கு எதிராக முடிவு எடுக்கமாட்டேன் - கர்நாடக சபாநாயகர் 

webteam

15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது அரசியலமைப்புக்கு எதிராக எவ்வித முடிவும் எடுக்கமாட்டேன் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு காங்கிரஸ் அதிருத்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மனுக்கள் மீது ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும் ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் என்றும் அவர்களை கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது அரசியலமைப்புக்கு எதிராக எவ்வித முடிவும் எடுக்கமாட்டேன் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம், லோக்பால் அமைப்புக்கு எதிராகவும் முடிவு எடுக்க மாட்டேன் எனவும் அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் லோக்பால் சட்ட விதிகளுக்குட்பட்டே முடிவு எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.