இந்தியா

காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மனு

காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மனு

Sinekadhara

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மனு அளித்திருக்கிறது.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறதோ அதே நிலைப்பாட்டைத்தான் நாங்கள் காவிரி - குண்டாறு விவகாரத்தில் எடுப்போம் என்பதை மேற்கோள் காட்டியே, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.

1958ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2008ஆம் ஆண்டு ரூ.3290 கோடியில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 14,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் 40டிஎம்சி நீரை பயன்படுத்தும் தமிழக அரசின் இந்த காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கர்நாடக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, காவிரி கர்நாடகாவின் உரிமை, அதில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என எடியூரப்பா கூறியிருந்த நிலையில் தற்போது, தமிழக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.