கர்நாடகாவில் சமீபத்தில் அமைச்சர் பதவியேற்ற சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ், தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அமெரிக்கா சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க் களும், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவசரமாக பெங்களூரு திரும்பிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா, துணை முதலவர் பரமேஸ்வரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற் சியில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை செயல்படுத்தும் வகையில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது.
இதனிடையே, மும்பையில் முகாமிட்டுள்ள 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளனர். ராஜி னாமா முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்றும், அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பாட்டில் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க் கள் கூட் டம், ஏலகங்காவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓட்ட லிலேயே தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏவான நாகேஷ், தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.