இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைவர் கன்னையா குமார் மற்றும் ராஷ்ட்ரிய தலித் அதிகார மன்ச் (ஆர்டிஏஎம்) எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
கன்னையா குமார் கூறுகையில், 'நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். காரணம் காங்கிரஸ் வெறும் ஒரு கட்சி அல்ல. அது ஒரு கொள்கை. நாட்டில் பழமையான மிகவும் ஜனநாயமிக்க ஒரு கட்சி. நான் ஜனநாயகத்தை வலியுறுத்துகிறேன்.
நான் மட்டுமல்ல காங்கிரஸ் இல்லாமல் நாடு இயங்காது என பலரும் உணர்ந்திருக்கிறார்கள்'' என்றார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், 'இந்த இளம் தலைவர்களுடன் இணைந்து பாசிசத்தை வீழ்த்துவோம்' என்றார்.