கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கபசுரக் குடிநீர் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எழுப்பிய கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்துள்ளார். அதில், சித்த மருந்தான கபசுரக் குடிநீரில் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார்.
இக்குடிநீர் இரத்த உறைதலை தடுப்பதிலும், ரெட்மிசிவர் முதலான மிக முக்கிய நவீன ஆண்ட்டி வைரஸ் மருந்துகள் செயல்படுவது போல கபசுரக் குடிநீர் செயல்பட வாய்ப்பிருப்பதை முதல் நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.