இந்தியா

நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

webteam

கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து மே 9ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கர்ணன் தலைமறைவாக இருந்தார். கர்ணனை தீவிரமாக தேடி வந்த மேற்குவங்க காவல்துறையினர் கோவையில் அவரை கைது செய்து கொல்கத்தா அழைத்துச்சென்றனர். கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறினார். 

இதையடுத்து, அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அங்கு அவரது உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, கர்ணனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்பட்டது. அதனால் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.