உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் குறித்த வழக்கை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் தயக்கத்துடன் மறுத்துள்ளார். இவ்வழக்கில் தான் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அது 24 மணி நேரத்தில் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே இதில் உள்ள சிரமத்தை மனுதாரர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் குறித்த வழக்கை பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷண் தொடர்ந்திருந்தார். இதற்கு செலமேஸ்வர் இவ்வாறு பதிலளித்தார். முன்னதாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் நீதிபதி செலமேஸ்வர் வழங்கிய தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மறுநாளே மாற்றியிருந்தது. இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்திலேயே வழக்கை விசாரிக்க நீதிபதி செலமேஸ்வர் மறுத்திருந்தார். இதையடுத்து சாந்திபூஷண் தொடர்ந்த வழக்கை விசாரிக்க நீதிபதி செலமேஸ்வர் மறுத்ததை அடுத்து அதை தாமே விசாரிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.