இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும்: நீதிபதி பானுமதி கடிதம்

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும்: நீதிபதி பானுமதி கடிதம்

webteam

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிடி கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு நீதிபதி பானுமதி கடிதம் எழுதியுள்ளார். 

இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், கொலீஜியத்தில் உறுப்பினராக இல்லாத உச்ச நீதிமன்ற நீதிபதியான பானுமதி, நீதிபதிகள் இடமாற்றத்தில் சீனியாரிட்டி கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

ராமசுப்ரமணியனைவிட மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் சுதாகர், சீனியர் என்ற நிலையில், அவரை உச்ச நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்திருக்க வேண்டும் என பானுமதி குறிப்பிட்டுள்ளார். 

பானுமதி, ராமசுப்ரமணியன், ராமலிங்கம் சுதாகர் ஆகிய மூன்று நீதிபதிகளுமே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் எனபதும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.