வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல், இன்று ஒடிசாவின் பூரி கடற்கரையை கடக்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு தீவிர காற்றழுத்தமாக வலுவிழந்த புயல், ஒடிசா கடற்கரை அருகே நகர்ந்து வருவதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கவுள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் தெற்கு மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மக்கள் நிம்மதியடைந்தனர்.
புயல் வலுவிழந்ததால் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி வேகத்தை ஒடிசா அரசு சற்று குறைத்துள்ளது. முன்னதாக, புயல் பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.