இந்தியா

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..!

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..!

Rasus

பாஜக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டியை நவம்பர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் ஃப்ரீத். இவர் பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் ஃப்ரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி அமலாக்கத் துறை அதிகாரிகளும் ஃப்ரீத் மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஃப்ரீத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற பாஜக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி தன்னிடம் இருந்து 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஜனார்த்தன ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து ஜனராத்தன ரெட்டி தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. இதனிடையே ஜனார்த்தன ரெட்டி நேற்று முன்தினம் திடீரென போலீசார் முன்பு ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார். அவரிடம் இரவு முழுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனயைடுத்து நேற்று காலை ஜனார்த்தன ரெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரது நெருங்கிய உதவியாளர் அலிகான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பல்லாவரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி கனிமசுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து கடந்தாண்டு தான் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.