டெல்லி ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு, மசூதி வளாகத்திற்குள் ஒரு தனிப் பெண்ணோ அல்லது பெண்கள் குழுவாகவோ நுழைவதைத் தடை செய்ததுள்ளது.
ஜமா மஸ்ஜித்துக்கு பெண்கள் வர வேண்டும் என்றால் அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் உடனே உள்ளே வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த விவகாரம் தொடர்பாக ஜமா மஸ்ஜித் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இதுபோன்ற தடையை பிறப்பிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜமா மஸ்ஜித்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சபியுல்லா கான் கூறியிருப்பது, ‘ மஸ்ஜித்தினுள் வந்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதனால் இங்கு வந்து வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில பெண்கள் தனியாக வந்து, அவர்களது காதலர்களை சந்திக்கிறார்கள். இதுமாறியான, பல சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து தான், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இது நமாஸ் செய்ய அங்குள்ளவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளது. குடும்பங்கள் அல்லது திருமணமான தம்பதிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை," என்றுள்ளார்.