நாட்டிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையம் என்ற இடத்தை ஜெய்ப்பூர் ரயில் நிலையம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான விழா மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்ட சுத்தம் தொடர்பான ‘ஸ்வச் ரயில் ஸ்வச் பாரத்’ ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இது நாட்டிலுள்ள 720 ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்டது.
அதன்படி நாட்டிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் ரயில் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் மற்றும் துர்காபுரா இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த திண்டுக்கல் ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் 39ஆவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 58ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல ரயில்வே மண்டல பட்டியலில் வடமேற்கு ரயில்வே மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் சென்ற வருடம் இரண்டாவது இடத்திலிருந்த தென்னக ரயில்வே தற்போது இரண்டு இடங்கள் பின் தங்கி நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.