இந்தியா

ஆதார் கட்டாயமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஆதார் கட்டாயமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Rasus

வருமான வரி தாக்கல் செய்வதற்கும், நிரந்தர கணக்கு எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களில், ஆதார் எண் பெறுவது மக்களின் தனிப்பட்ட விருப்பம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, அரசின் உத்தரவு இருப்பதாக வாதிட்டனர். ஆனால் போலி நிரந்தர எண்களை களைவதற்காகவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதாக மத்திய அரசு வாதிட்டது. இந்த போலி நிரந்தர எண்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் அளிப்பதற்கும், கருப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுவதாகவும் அரசு வாதிட்டிருந்தது. ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதன் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்திருப்பதாக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.