13 ஆண்டுகள் திரைப்பட ரசிகர்களைக் காக்க வைத்த அவதார் 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 16 அன்று வெளிவந்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, அவதார் 2 படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
"அவதார்: தி வே ஆஃப் வாட்டர்"
ஜேம்ஸ் கேமரூனின் 2009 திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியான "அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" அமெரிக்க நாடக அறிவியல் திரைப்படமாகும். அவதார் தொடரின் இரண்டாவது தொடர்ச்சியை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் வெளியிட்டிருக்கிறது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வியந்து கொண்டு பார்க்க வைக்கிறது.
உற்சாகத்தில் மாரடைப்பு
ஆந்திர மாநிலம், பெட்டபுறம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் லக்ஷிமிரெட்டி ஸ்ரீனு என்ற நபர் அவரது தம்பியுடன் "அவதார் 2" படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, படத்தை பார்த்துக் கொண்டிருந்த போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும், அதிக உற்சாகம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
முதல்முறை அல்ல
இதேபோன்ற சம்பங்கள் நடப்பது முதல்முறை இல்லை. கடந்த 2010-ல் "அவதார்" படம் வெளிவந்த பொது தைவான் நாட்டில் இதைப்போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. அதேபோல், ஹாலிவுட் திகில் படமான 'அனாபெல்லே கம்ஸ் ஹோம்' பார்த்துவிட்டு 77 வயது முதியவர் மரணமடைந்தது, கடந்த 2018-ல் ஆந்திராவில் "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்" திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறது என பல சம்பவங்களை குறிப்பிடலாம்.
அருணா ஆறுச்சாமி