இந்தியா

பாதுகாப்பை நிராகரிக்கும் இரோம் ஷர்மிளா...

பாதுகாப்பை நிராகரிக்கும் இரோம் ஷர்மிளா...

webteam

மணிப்பூர் பெண் போராளி இரோம் ஷர்மிளா, மாநில அரசால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்க மறுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இரோம் ஷர்மிளாவுக்கு 6 காவல் துறையினர் கொண்ட குழுவைப் பாதுகாப்பு பணிக்காக மாநில அரசு அனுப்பியது. எனினும் இரோம் ஷர்மிளா அதனை ஏற்க மறுத்துள்ளார்.

தான் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புவதாகவும், பாதுகாப்புக்காக காவல்துறையினர் உடன்‌ செல்லும் விஐபி நடைமுறை தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மணிப்பூர் சட்டமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.