இந்தியா

திருப்பதியில் துப்பாக்கியுடன் வந்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை

திருப்பதியில் துப்பாக்கியுடன் வந்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயில் சோதனைச் சாவடியில், காரில் துப்பாக்கியுடன் சென்ற வடமாநில குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் நுழைவு வாயிலில் உள்ள அலிபிரி சோதனை சாவடியில் அனைத்து பக்தர்களின் வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இன்று காலை போலீசாரும் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மஹாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட காரில் 14 சுற்றுகள் கொண்ட தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி, மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

காரில் வந்த 2 பெண்கள் 1 வாலிபரிடம் இருந்தவர்களை விசாரித்தபோது மஹாராஷ்டிரா மாநிலம் பூனேயை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. காரில் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தங்கள் கணவருடையது என்று தெரிவித்தனர். மேலும், அவருடைய கணவர் மஹாராஷ்டிரா காவல்துறையில் பணி புரிந்து வருவதாகவும், அவருடைய கணவர் தங்கள் குடும்பத்தை சேர்ந்த இருவருடன் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றதாக தெரிவித்தனர். இருப்பினும் துப்பாக்கியை கார் சீட்டின் அடியில் எதற்காக மறைத்து கொண்டு சென்றனர் என்றும், கோயிலுக்கு வருபவர்கள் எதற்காக மது பாட்டில்கள் கொண்டு வந்தீர்கள் என்றும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாத யாத்திரையாக சென்ற பக்தர்களை காலி கோபுரம் அருகே அடையாளம் கண்டு அவர்களை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிக்கு உரிய லைசன்ஸ் இருப்பதாக தெரிய வந்துள்ளது.