இந்தியா

பயணிகளின் சிரமத்தை குறைக்க புதிய ரயில் சேவை

பயணிகளின் சிரமத்தை குறைக்க புதிய ரயில் சேவை

webteam

பயணிகளின் சிரமத்தை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு பாதைகளில் புதிய ரயில் சேவைகளை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. 

வடமாநிலங்களில் ரயில் சேவை குறைவால், பெரும்பாலானோர், பேருந்துகளில் பயணிக்க வேண்டி உள்ளது. அதிகமானோர் ரயில் பயணம் செய்யவே விரும்புவதால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்,  ஆயிரக்கணக்கான பயணிகளின் சிரமத்தை குறைக்கும் நோக்கில், உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார், பஞ்சாப், டெல்லி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு பாதைகளில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக போபால் - சிங்குராலி மற்றும் சிங்குராலி - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளை மத்திய ரயில்வேது‌றை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து இன்று தொடக்கி வைத்தார்.
இதையடுத்து மற்ற ரயில்சேவைகளை நாளை மத்திய ரயில்வேது‌றை அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.