இந்தியா

அக்னிபத் எதிர்ப்பு போராட்டம் - இந்திய ரயில்வேக்கு இத்தனை கோடிகள் இழப்பா?

அக்னிபத் எதிர்ப்பு போராட்டம் - இந்திய ரயில்வேக்கு இத்தனை கோடிகள் இழப்பா?

webteam

ஜூன் 14 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடந்த போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு 259 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முப்படைகளில் குறுகிய காலம் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் புதிய திட்டமான ‘அக்னிபத்’ எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள இந்த திட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள், ரயில் தீ வைப்பு, வன்முறை சம்பவங்கள் ஆகியவரை நடைபெற்றன. குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றது.

இந்நிலையில் அக்னிபத் போராட்டத்தால் ரயில்வேக்கு 259 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல மாநிலங்களில் ரயில்களை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அதனால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 14 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடந்த போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு 259 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.