இந்தியா

சோதனை முயற்சியில் தொடங்கியது மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை!

சோதனை முயற்சியில் தொடங்கியது மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை!

நிவேதா ஜெகராஜா

மெத்தனால் கலந்த பெட்ரோல் முதல்முறையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

15% மெத்தனால் கலந்த பெட்ரோல் அசாம் மாநிலம் டின்சுக்கியாவில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்-களில் விற்கப்பட உள்ளது. சோதனை ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்யா, நிதி ஆயோக் தலைவர் விகே சரஸ்வத் ஆகியோர் தொடங்கிவைத்தனர். `பெட்ரோலுடன் மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது மூலம் பெட்ரோல் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் கணிசமாக குறைக்க முடியும்’ என அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே மெத்தனால் கலந்த எரிபொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டின் ஜூன் மாதம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி விவசாயிகள் சிலருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு சாத்தியம்” என்று கூறினார். அதற்கான முதற்படியாக தற்போதைய இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.