இந்தியா

தொடரும் எல்லைப் பிரச்னை.. தென் சீனக் கடலுக்கு போர்க்கப்பலை அனுப்பிய இந்தியா..!

தொடரும் எல்லைப் பிரச்னை.. தென் சீனக் கடலுக்கு போர்க்கப்பலை அனுப்பிய இந்தியா..!

EllusamyKarthik

கடந்த ஜூன் மாதத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பிரச்னை காரணமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியக் கடற்படை தென் சீனக் கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது கூட இந்திய கடற்படை, தென்  சீனக்கடல் பகுதியில் போர்க்கப்பலை  நிலைநிறுத்துவது தொடர்பதாக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது சீனா.

கடந்த  2009 முதலே இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலைகளை சீன கடலோர எல்லை பகுதியில் நிறுத்துவதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. 

கடல் மூலமாக  இந்தியாவுக்கு  எந்தவித  அச்சுறுத்தலும்  ஏற்படக் கூடாது என்பதை கண்காணிப்பதற்காக போர்க்கப்பலை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளதாக அரசாங்க வாட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பல்களையும் நிறுத்தியுள்ளது. நீர் மூழ்கி  கப்பல்கள் மற்றும் ஆளில்லா தானியங்கி முறை கப்பல்களையும் கொண்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கப்பற் போக்குவரத்து அதிகமுள்ள மலாக்கா நீரிணை பகுதியையும் இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.