லட்சத்தீவு pt web
இந்தியா

லட்சத்தீவு vs மாலத்தீவு; இந்திய அரசின் அடுத்தடுத்த ஆக்‌ஷன்; புதிய விமான நிலையம் உருவாகிறதா?

லட்சத்தீவில் உள்ள மினிகாய் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Angeshwar G

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தையும், இந்தியர்களையும் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோன்று ஆளும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

மோடி, மாலத்தீவு அமைச்சர்கள்

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது. அத்துடன், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து எனவும், இதில் மாலத்தீவு அரசுக்கும் சம்பந்தமில்லை எனவும் விளக்கம் அளித்தது.

இருந்தபோதும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மாலத்தீவின் தூதர் இப்ராகிம் ஷாகிப்பிற்கு சம்மன் அனுப்பி தங்களது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது. சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்திருந்த அமைச்சர்களுக்கு இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்திருந்தனர்.

மாலத்தீவுக்கு மாற்றாக லச்சத்தீவை உருவாக்க வேண்டும் என்றும் பலரும் இணையத்தில் கோரிக்கை வைத்தனர். easemytripன் சீஇஓ பிரசாந்த் பிட்டி மாலத்தீவுக்கான விமான முன்பதிவு சேவையை இடைநிறுத்தம் செய்தவதாக அறிவித்திருந்தார். இதனை ஒட்டு மேக் மை ட்ரிப்பின் வாடிக்கையாளர்கள், மாலத்தீவுக்கான சேவைகளை நிறுத்தும்படி மேக் மை ட்ரிப் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“இந்தியா - மாலத்தீவு இடையேயான விமான முன்பதிவுகள் ரத்து” - Easy my Trip

இந்நிலையில் லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட பயணிகள் விமானங்களையும் இயக்கும் விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்கான திட்டங்கள் பல ஆண்டுகளாக இருந்த போதும், சமீப காலங்களில் கடலில் கப்பல்கள் மீது கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல் போன்றவற்றின் காரணமாக போர் விமானங்கள் உட்பட கூட்டு விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது லட்சத்தீவில் அகட்டி எனும் இடத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கு குறிப்பிட்ட ரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும். அனைத்து வசதிகளையும் இந்த விமான நிலையத்தின் மூலம் பயன்படுத்த முடியாததன் காரணமாக புதிய விமான நிலையம் கட்டப்படுவதன் மூலம் சுற்றுலாத்துறையும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.