இந்தியா

விண்வெளியிலிருந்து தெரிகிறது படேலின் சிலை !

விண்வெளியிலிருந்து தெரிகிறது படேலின் சிலை !

webteam

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமெரிக்க நிறுவனம் ஒன்று செயற்கைகோள் மூலம் விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இது இதுவரை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டிலும் மிஞ்சிய அளவில் உள்ளது. 

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் இந்த சர்தார் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. 

இந்த சிலை குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சிலை 3000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. படேலின் இந்த வெண்கல சிலை அமைக்கும் பணி கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமெரிக்க நிறுவனம் ஒன்று செயற்கைகோள் மூலம் விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இது இதுவரை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டிலும் மிஞ்சிய அளவில் உள்ளது. 

இந்த பட்டியலில் எகிப்தில் வடிவமைக்கப்பட்ட பிரமீடு ஏற்கெனவே இடம் பெற்றிருந்தது. இந்த புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர் எடுத்துள்ளனர். 

மேலும் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அருகே உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவுகளை சர்வதேச விண்வெளி பயணத்தின் போது, 39 பேர் கொண்ட குழுவினர் பூமியிலிருந்து 350 கிலோ மீட்டர் மேலே பறக்கும்போது புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது படேல் சிலையும் இடம்பெற்றுள்ளது. மற்ற புகைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு சர்தார் வல்லபாய் படேலின் புகைப்படத்தை செயற்கைகோள் மூலம் விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் நவம்பர் 15ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நர்மதை ஆற்றின் அருகே உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை வடிவம் தெளிவாக பதிவாகியுள்ளது.