இந்தியா

சந்திராயன் 3 திட்டத்தின் ஒலியியல், அதிர்வு சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் 3 திட்டத்தின் ஒலியியல், அதிர்வு சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

webteam

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் 3 திட்டத்திற்கான தொழில்நுட்பப் பணிகள் கடந்த இரண்டு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தின் உயர் ரக சோதனை மையத்தில் 25 வினாடிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு கிரையோஜெனிக் இன்ஜின் வெப்ப சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் சோதனை, ஏவப்பட்ட பிறகு அதன் இயக்கத்தன்மை, செயல்பாடுகளின் முக்கியமான கட்டம் என தெரிவிக்கப்படுகிறது. ஜூன் இறுதியில் சந்திராயன் மூன்று விண்கலத்தை விண்ணில் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரோ திட்டமிட்டபடி சோதனை முயற்சி வெற்றி பெற்று வருவதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சந்திராயன் 2 திட்டத்தின் ரோவர் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் அடையும் போது வெடித்து சிதறிய நிலையில் சந்திராயன் 3 திட்டத்தை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். சந்திரயான் -2 இன் லேண்டர், ரோவர் கலவை தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் இன்னும் நிலவின் மேற்பரப்பிற்கு மேலே வட்டமிடுகிறது, பெரிய அறிவியல் செயல்பாடுகளை நடத்தும் நிலையில் சந்திராயன் 3 திட்டத்தில் அந்த ஆர்பிட்டரும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்எல்வி மார்க் 3 வகை ராக்கெட் கள் இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் ராக்கெட்டின் செயல்பாடு மற்றும் வானிலையை பொறுத்து திட்டம் ஏவுவது குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது..