இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக்கை ஒட்டிய எல்லை கோட்டின் இரு பகுதியிலும் இரு நாட்டு படைகளும் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் அமைச்சர்கள் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று 5 அம்ச திட்டம் வெளியிடப்பட்டது.
எனினும் இதற்கு பின்னரும் துருப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் அதே வலிமையுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சீன படைகளின் அத்துமீறல் முயற்சியை கடந்த 4 மாதங்களில் 2 முறை இந்திய படைகள் முறியடித்துள்ளன. இதையடுத்து எல்லைப் பகுதியில் இந்தியா படைகளை அதிகளவில் குவித்துள்ளது.
சீனாவும் அதிக துருப்புகளை நிறுத்திவைத்துள்ளது. இதற்கிடையில் எல்லையில் என்ன நிலவரம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.