காக்னிஸன்ட் மென்பொருள் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. வருமானத்தை குறைவாகக் காட்டி ரூ.2,500 கோடி வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரை அடுத்து காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், காக்னிசன் நிறுவனத்தின் சில வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், ‘2016-17 நிதியாண்டில் காக்னிசன்ட் நிறுவனம் ரூ2500 கோடிக்கு மேல் நிலுவைத் தொகை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அது செலுத்த தவறிவிட்டது’ என்றார்.
காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு சென்னையில் ஓஎம்ஆர் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான கிளைகள் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.