இந்தியா

கேரளாவை புரட்டிப் போடும் மழை - நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

கேரளாவை புரட்டிப் போடும் மழை - நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

rajakannan

கேரளாவின் கோழிக்கோடு தாமரஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 270 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கோழிக்கோடு, ஆழப்புலா உள்ளிட்ட பகுதிகள் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோழிக்கோட்டின் தாமரஞ்சேரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் மேலும் 3 குழந்தைகள் உட்பட 7 பேரை காணவில்லை.

பல வீடுகள் மண்ணில் மூழ்கியுள்ளன; தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.