மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர்கள் இடமாற்றம், புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்க மாநிலம், பிகார், நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலாங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆளுநர்கள் நியமனம்:
1. மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உத்தரப்பிரதேச ஆளுநராக நியமனம்
2. பிகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியப் பிரதேச ஆளுநராக நியமனம்3. மேற்குவங்க ஆளுநராக இருந்த கேசரி நாத் திரிபாதிக்கு பதிலாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜகதீப் தாங்கர் நியமனம்
4. பாஜகவைச் சேர்ந்த ரமேஷ் பயஸ் திரிபுரா ஆளுநராக நியமனம்
5. பீகார் ஆளுநராக பஹூ சவுகான் நியமனம்
6. நாகலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்