இந்தியா

உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியான முதல் பெண் வழக்கறிஞர்

உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியான முதல் பெண் வழக்கறிஞர்

rajakannan

உச்சநீதிமன்ற நீதிபதியாக பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்திற்கு நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, இவர் பிரபல வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மல்ஹோத்ரா மகள். 1983-ம் ஆண்டு தனது வழக்கறிஞர் தொழிலை பார் கவுன்சலில் பதிவு செய்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த பெண் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் மூத்த வழக்கறிஞராக லீலா சேத் நியமிக்கப்பட்டிருந்தார்.  

இந்து மல்ஹோத்ரா உடன் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.எஸ்.ஜோசப்பும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜீயம் அமைப்பு இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.