இந்தியா

நோட்டாவுக்கு வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் அவசர வழக்கு

நோட்டாவுக்கு வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் அவசர வழக்கு

webteam

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூறி காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையை நாளை எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். 

குஜராத்தில் வரும் 8ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை வீழ்த்துவதற்காக பாரதிய ஜனதா அரசு பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது. இதன் ஒரு பகுதியாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனக் கூறும் நோட்டா முறையை குஜராத் மாநிலங்களவை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் நோட்டாவை பயன்படுத்தும் காங்கிரஸ் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை விசாரணைக்காக இதனை எடுத்துக்கொள்வதாக கூறினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதற்கான நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.