இந்தியா

“பிரதமர் பதவியை ஏற்கத் தயார்” - மாயாவதி

“பிரதமர் பதவியை ஏற்கத் தயார்” - மாயாவதி

webteam

பிரதமர் பதவியை ஏற்க‌த் தயார் என உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ப‌தவிக்கான போட்டியில் தாம் இருப்பதாக கடந்த மார்ச் ‌மாதம் மாயாவதி சூசகமாக தெரிவித்திருந்‌தார். ஆனால், மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடாததால், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். 

இ‌ந்நிலையில், உ‌த்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, மக்களவைத் தேர்தலில் தாம்‌ போட்டியிடாததை கண்டு கட்சியினர் யாரும் வேதனைப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அரசியல் கணக்குகள் சுமுகமாக நடைபெற்றால் அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து தாம் போட்டியிடப் போவதாகவும், ஏனெனில் தேசிய அரசியலுக்கான பாதை, அம்பே‌த்கர் நகர் வழியாகத் தான் செல்கிறது எ‌ன்றும் மாயாவதி கூறினார். 

பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பது சட்டம் என்றும் அதன்படி தம்மால் எம்.‌பி.யாக முடியும் என்றும்‌ ‌மாயாவதி நம்பிக்கைத் தெரிவித்தார்.