இந்தியா

ஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன?

ஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன?

webteam

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தற்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில், புதிய மாற்றம் செய்யப்படுகிறது. 

சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்தப்படுகின்றன. ஒரு
காலியிடத்திற்கு 13 பேர் வீதம் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் இருந்து, பிரதானத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். 9
தாள்களைக் கொண்ட பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1 பதவிக்கு 2.5 என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு
தகுதி பெறுவர். 

நேர்காணல் முடிந்த பிறகு பிரதானத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் சேர்க்கப்படும். அதனடிப்படையில், தேர்வானோரின்
இறுதிப் பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். அதன் பிறகு ஒரு மாத காலத்தில் பணி ஒதுக்கீடு மற்றும்
எந்த மாநிலத்தில் பணி என்ற ஒதுக்கீடுகள் நிறைவு பெறும். தேர்வானவர்களுக்கு, 100 நாட்கள் அடிப்படைப் பயிற்சி உள்ளிட்ட ஓராண்டு
அகாடெமிக் பயிற்சியும், ஓராண்டு பணி ஒதுக்கப்பட்ட இடத்தில் பயிற்சி காலப் பணியும் வழங்கப்படும்.

தற்போதைய மத்திய அரசின் பரிந்துரைப்படி, பிரதானத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண்களுடன் சேர்த்து 100 நாள் அடிப்படை பயிற்சியில்
வழங்கப்படும் மதிப்பெண்ணும் சேர்க்கப்படும். அதன் பிறகுதான், பணி ஒதுக்கீடும், கேடர் எனப்படும் எந்த மாநிலத்தில் பணி என்ற
ஒதுக்கீடும் நடைபெறும்.