இந்தியா

‘பீகார் பரப்புரையின் போது பாதுகாப்பற்ற நிலையில் இருந்தேன்’ பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல்

‘பீகார் பரப்புரையின் போது பாதுகாப்பற்ற நிலையில் இருந்தேன்’ பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல்

EllusamyKarthik

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 71 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. சுமார் 51 சதவிகித வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன. அவர்களுக்கு பக்கபலமாக கூட்டணி கட்சிகள் வலு சேர்க்கின்றன.

லோக்  ஜனசக்தி கட்சி மாநில தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  

இந்நிலையில் லோக் ஜனசக்தி கட்சிக்காக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் அந்த கட்சியின் வேட்பாளர் பிரகாஷ் சந்திரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 

“அந்த பரப்புரை நாட்கள் எனக்கு நரக வேதனையாக இருந்தது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்ந்தேன். என்னை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று விடுவார்களோ என்ற அச்சமும் இருந்தது. 

என்னை சுற்றி இருந்தவர்கள் ஆபத்தானவர்களாக தெரிந்தனர். மிரட்டல் விடுத்ததோடு, என்னிடம் தவறாகவும் நடந்து கொள்ள முயன்றனர். 

எனக்கு வேறு வழி இல்லாததால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பத்திரமாக மும்பை திரும்பும் வரை அமைதியாக இருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

மும்பை வந்த பிறகும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அமீஷா தெரிவித்துள்ளார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார் பிராகாஷ் சந்திரா.