இந்தியா

மனிதப் பிரமிடு சாகச விளையாட்டா? கோர்ட் கேள்வி

மனிதப் பிரமிடு சாகச விளையாட்டா? கோர்ட் கேள்வி

webteam

உறியடி விழாவின் போது அமைக்கப்படும் மனித பிரமிடு எப்படி சாகச விளையாட்டு ஆகும் என மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் மனித பிரமிடு அமைக்கும் உறியடி விழா, ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும். இதில், சிறுவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல் மனித பிரமிடு அமைக்கக் கூடாது என்றும் மும்பை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், மாநில அரசு அவ்விழாவை சாகச விளையாட்டாக அறிவித்து, நீதிமன்ற விதிமுறைகள் பலவற்றை தளர்த்தியது. அதன்படி, 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்தும் சாதனா ஜாதவும் ‘மனித பிரமிடை எப்படி சாகச விளையாட்டு என்கிறீர்கள்? சிறுவர்களை இதில் அனுமதிக்கலாம் என்றால், 5 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் கூட இதில் பங்கேற்கலாமா?’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர் சாகச விளையாட்டில் இதை வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டனர்.