இந்துக்கள், தங்களது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
’இந்திய கலாசாரத்தில், கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம் இல்லை. நாம் மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரியது. நமது கலாசாரம் மிகவும் பழமையானது’ என்று மத்திய அமைச்சர் கிரிராஜ், அவுரங்காபாதில் நடைப்பெற்ற ஒரு விழாவில் கூறினார்.
அம்மாவை, மம்மி என்று குழந்தைகள் கூப்பிடும் நிலை வந்துவிட்டதாகவும், அம்மா மற்றும் அப்பா என்ற வார்த்தைகளில் பாச உணர்வு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மை இல்லை எனவே சிறுபான்மை பட்டியலில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21 கோடியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிராஜ் சிங் தீவிர இந்துத்துவ அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.