இந்தியா

"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது" நிர்மலா சீதாராமன்

"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது" நிர்மலா சீதாராமன்

jagadeesh

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் உறுதி அளித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அவசரகதியில் பார்த்தால், பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகத் தெரியும் என்ற அவர், ஆனால் பொருளாதாரம் மந்தமாக இல்லை எனவும், எப்போதும் மந்தநிலைக்கு வராது எனவும் உறுதிபடத் தெரிவித்தார். 

கடந்த 2009 ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 புள்ளி 4 சதவிகிதமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2014 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 5ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதனிடையே‌ நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.