இந்தியா

100 ரயில் நிலைய பராமரிப்பு தனியார்வசம்?

100 ரயில் நிலைய பராமரிப்பு தனியார்வசம்?

webteam

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் 100 ரயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாரிடம் விட ரயில்வே திட்டமிட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி இடையே புதிய ரயிலை தொடங்கி வைத்துப் பேசியபோது இதை அவர் குறிப்பிட்டார். ரயில்கள் இயக்கத்தில், பயணிகள் கொடுக்கப்படும் வசதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ரயில் வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பது பற்றி பரிசீலித்து வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார். 
ரயில்வேயின் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கோயல் தெரிவித்தார். 
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் தடம்புரண்டதையடுத்து, ரயில்வே அமைச்சர் பதவியை சுரேஷ் பிரபு கடந்த 4ஆம் தேதி ராஜினாமா செய்த நிலையில், பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார்.