ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று அத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில்வேயின் வணிகரீதியான மற்றும் ரயிலுக்குள் சில சேவைகளை மட்டுமே தனியார் மூலம் அவுட்சோர்சிங் முறையில் பெறப்படுவதாக பியுஷ் கோயல் தெரிவித்தார்.
இதன்மூலம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றார். மத்திய அரசின் மற்றும் மக்களின் சொத்தாக ரயில்வே நீடிக்கும் என்றும் அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.