இந்தியா

உலகத் தலைவர்கள் பட்டியல் கருத்துக்கணிப்பு: பிரதமர் மோடியின் செல்வாக்கு சற்று சரிவு

உலகத் தலைவர்கள் பட்டியல் கருத்துக்கணிப்பு: பிரதமர் மோடியின் செல்வாக்கு சற்று சரிவு

Veeramani

உலகின் ஒப்புதல் மதிப்பீட்டின் தலைவருக்கான புள்ளிகளில் பிரதமர் நரேந்திர மோடி சரிவை சந்தித்திருக்கிறார். இருப்பினும் அவர் முதல் இடத்திலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Morning consult என்ற அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு வருடம்தோறும் global leader approval rating tracker என்ற பெயரில் ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஜெர்மனி, பிரேசில், இத்தாலி பிரிட்டன், இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய 14 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு 75 புள்ளிகளைப் பெற்று இருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு வெறும் 66 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆனாலும ஒப்புதல் மதிப்பீட்டு தலைவர்களில் தொடர்ந்து அவர் முதல் இடத்திலேயே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெரும் தொற்று இரண்டாம் அலையின் பிற்பகுதியில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் புள்ளிகள் சரிந்து இருப்பதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 65 புள்ளிகளுடன் இத்தாலிய பிரதமர் இரண்டாவது இடத்திலும், ஜெர்மன் அதிபர் 5வது இடத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6வது இடத்திலும் உள்ளனர்.