இந்தியா

வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி  

வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி  

Veeramani

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் கொரோனா வைரஸ் மட்டுமல்ல, மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளும்தான். வெற்று பேச்சுகளுக்கு பதிலாக, மத்திய அரசு தீர்வினை காண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 நெருக்கடி  நிலைமையை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பிற்குள்ளாகி தனிமைப்படுத்தலில் உள்ள ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில்,  "கொரோனா பாதிப்புக்குள்ளாகி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், நாட்டில் கொரோனா நெருக்கடி குறித்து சோகமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி என்பது கொரோனாவால் மட்டுமல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளினாலும் ஏற்படுகிறது. எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம், நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் "என்று அவர் இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.