பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் திரத் சிங் ராவத் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார்.
பாஜக ஆளும் உத்தராகண்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள திரத் சிங் ராவத் “ஒரு முறை நான் விமானத்தில் பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். என்ன மாதிரியான நடத்தை இது?” என்று தெரிவித்தார்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரத் சிங் ராவத் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது. இது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட "மோசமான முன்மாதிரி".
பெண்கள் ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இவை அனைத்தும், மேற்கத்தியமயமாக்கலின் ஒரு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற பெண்கள் சமூகத்திற்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள்” என்றும் கேள்வியெழுப்பினார்.