இந்தியா

சுங்கச் சாவடிகள் காத்திருப்பால் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி இழப்பு

சுங்கச் சாவடிகள் காத்திருப்பால் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி இழப்பு

Rasus

சுங்கச் சாடிவகளில் நீண்ட நேரம் காத்திருப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கு‌ம் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திவிட்டு எளிதாகக் கடக்க முடியும்.

இதனிடையே சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், மக்களின் நேரம் விரயமாவதோடு எரிபொருளும் வீணாகிறது. இதனால் ஆண்டுக்கு 12,000 கோடி வரை இழப்பீடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

12,000 கோடியில் 35 சதவீதம் வாகனங்களின் எரிபொருள் வீணாவது மற்றும் 54-55 சதவீதம் மனிதர்களின் நேரம் விரயம் ஆவதாக உள்ளது. இனி ஃபாஸ்டேக் முறை அமலாவது மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச் சாவடிகளில் காத்திருக்க தேவையில்லை. இதனால் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி மிச்சமாகும்.

Courtesy: TheTimesofIndia