இந்தியா

"பணமதிப்பு நீக்கத்தால் சந்தேக பரிவர்த்தனைகள் அம்பலம்"- மத்திய அரசு

"பணமதிப்பு நீக்கத்தால் சந்தேக பரிவர்த்தனைகள் அம்பலம்"- மத்திய அரசு

webteam

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து தெரியவந்துள்ளதாக மோடி தலைமையிலான அரசு கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு கால ஆட்சித் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதில், கருப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏழைகளுக்காக சுமார் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யோகா சென்றடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.