இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

JustinDurai

ஜம்முவில் நடந்த தாக்குதல் சம்பவத்தின்போது, நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணமடைந்தார்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் சிறப்பு காவல்படையினர் சோதனையில் ஈடுபட்ட போது பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்ததாக, ஜம்மு காஷ்மீரின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டின் போது, ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான 370ஆம் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் நாளை மறுநாள் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல்; 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமை - 4 ஆண்டுகளுக்கு பின் வழக்குப்பதிவு செய்த போலீசார்