உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், நான்கு பேருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராமசுப்பிரமணியன், கிருஷ்ணமுராரி, ரவீந்திர பாட், ஹிரிகேஷ் ராய் ஆகிய 4 பேர் புதிய நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களையும் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பதவியேற்ற நீதிபதிகளில், ராமசுப்பிரணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் டெல்லி இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வந்தவர். 1958 ஜூன் மாதம் 30ஆம் தேதி பிறந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மிக முக்கியமான நீதிபதியாக பணியாற்றினார். அதனை தொடர்ந்து தெலங்கானா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அவர் இமாச்சல் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.
தற்பொழுது இவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இன்றைய தினம் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.