இந்தியா

2021-ன் முதல் 6 மாதங்களில் உலகளவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும்: சீரம்

2021-ன் முதல் 6 மாதங்களில் உலகளவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும்: சீரம்

Veeramani

2021-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் உலகளவில்  கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்அவர் மேலும் " இந்த பற்றாக்குறைக்கு யாரும் உதவ முடியாது. ஆனால் ஆகஸ்ட்-செப்டம்பர் 2021 க்குள் இந்த பற்றாக்குறை குறையும். நாங்கள் 40-50 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் இருப்பு வைத்திருக்கிறோம். ஜூலை 2021 க்குள் சுமார் 300 மில்லியன் டோஸை உற்பத்தி செய்வோம்" எனத் தெரிவித்தார்