இந்தியா

சிறுத்தையைக் கொன்று உடலை ஊர்வலம் கொண்டுபோன அசாம் மக்கள் - 7 பேர் கைது

சிறுத்தையைக் கொன்று உடலை ஊர்வலம் கொண்டுபோன அசாம் மக்கள் - 7 பேர் கைது

webteam

அசாமில் சிறுத்தையைக் கொன்றுவிட்டு அதன் உடலுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

அசாமில் சிறுத்தைகள் கொல்லப்படுவது வழக்கமாகி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அசாமில் மட்டும் இந்த வருடத்தில் கொல்லப்படும் 5வது சிறுத்தை இது என வனத்துறை தெரிவித்துள்ளது. அசாமின் கடப்பாரி பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறுத்தையைக் கொன்று அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி, இது ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடந்துள்ளது. பொறியில் சிக்கிய சிறுத்தை அதிலிருந்து விடுபடச் சிறிது நேரம் போராடும். நாங்கள் தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தோம். ஆனால் அதற்குள் அங்குள்ள மக்கள் அதனைக் கொன்றுவிட்டனர். அதுமட்டுமின்றி சிறுத்தையில் தோல், பல்,நகங்களை தனித்தனியாக எடுத்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேரை வனத்துறை கைது செய்துள்ளது.

இது குறித்துத் தெரிவித்துள்ள கடப்பாரி பகுதி மக்கள், இந்தச் சிறுத்தை சில நாட்களாக அப்பகுதி அச்சமூட்டி வந்ததாகவும், கோழி, ஆடுகளை அது வேட்டையாடியதாகவும் தெரிவித்துள்ளனர்.