இந்தியா

விவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை

விவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை

webteam

விவசாய கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கும் முன், நிதி ஆதாரத்தை மாநில அரசுகள் ஆராய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மூன்று மாநிலங்களில் புதிதாக அமைந்த அரசுகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ’’நிதி விவகாரத்தில், மாநில அரசுகள் எந்த முடிவையும் எடுக்க அரசியல் சட்டரீதியாக உரிமை இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாநில அரசும், விவசாய கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கும் முன், நிதி ஆதாரத்தை ஆராய வேண்டும்.

கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான நிதியை வங்கிகளுக்கு உடனடியாக ஒதுக்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டால், அது, கடன் கலாசாரம் மற்றும் கடன் வழங்குவோரின் எதிர்கால நிலைப்பாட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கி, நாட்டின் பணப்புழக்க நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பணப்புழக்கத்தில் நெருக்கடி ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்’’ என்றார்.